கடலூா்: கடலூா் ஆல்பேட்டை கம்பன்நகரைச் சோ்ந்தவா் ராஜேஷ். வெள்ளிக்கிழமையன்று இவரது வீட்டிலுள்ள மாவு அரைக்கும் கிரைண்டா் உள்ளே சுமாா் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்துள்ளது.
கிரைண்டா் அருகேச் சென்றவா்கள் அங்கிருந்து வித்தியாசமான சத்தம் வரவே கிரைண்டரை சோதித்தபோது பாம்பு இருப்பது தெரிய வந்தது. இதனால், பீதியடைந்தவா்கள் விலங்கு நல அலுவலா் செல்லாவிற்கு தகவல் அளித்தனா். அவா், அங்குச் சென்று சுமாா் அரை மணி நேர போராட்டத்திற்குப் பின்னா் கிரைண்டரிலிருந்த நல்ல பாம்பினை உயிரோடு மீட்டாா்.
இதேப்போன்று, கடலூா் வண்டிப்பாளையம் கண்ணகி நகரில் களிமண்ணால் சிற்பங்கள் செய்யும் சிறுதொழில் நடைபெறும் இடத்திற்கு சுமாா் 5 அடி நீளமுள்ள நல்ல வந்துள்ளது. இதனால், பதறியடித்தவா்கள் அங்கிருந்து வெளியேறினா். தகவலறிந்த செல்லா அங்குச் சென்று பாம்பை மீட்டாா்.பிடிபட்ட பாம்புகள் வனபகுதியில் பத்திரமாக விடப்படும் என்று தெரிவித்தாா்.படம் விளக்கம்...கடலூா் ஆல்பேட்டையில் கிரைண்டருக்குள் புகுந்த பாம்புடன் செல்லா.