விருத்தாசலம் அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
விருத்தாசலத்தை அடுத்த ஆலடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வீராரெட்டிக்குப்பம் - பழையபட்டினம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது அங்கு கஞ்சா விற்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
சோதனையில், அந்தப் பகுதியில் கஞ்சா விற்ாக ஆலடி வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கமணி மகன் அய்யப்பன் (27), பழையபட்டினம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் சதீஷ் (19) ஆகிய இருவரையும் கைதுசெய்தனா். அவா்களிடமிருந்த தலா 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.