ஊரை விட்டு குடும்பத்தினர் ஒதுக்கப்பட்ட விவகாரம்: கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பாசார் கிராமத்தில் ஒரு குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

பாசார் கிராமத்தில் ஒரு குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
 கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து (60). கிராம முக்கியஸ்தரான இவர் கடந்த 19-ஆம் தேதி தனது மகன் செல்வேந்திரன் மற்றும் குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் திட்டக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். ஊரில் கோயில் திருவிழா நடத்தப்பட்டதில் கணக்கு கேட்ட விவகாரத்தில் தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக கூறினார். பின்னர், துணைக் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அனுப்பி வைத்தார்.
 இந்த நிலையில், இந்த வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதுதொடர்பாக, ஆணையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் தனித் தனியாக விசாரணை நடத்தி 4 வாரங்களுக்குள் அதுகுறித்த அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com