திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வடலூர் அருகே கருங்குழி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா, திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடலூர் அருகே கருங்குழி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா, திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கடந்த ஏப். 15-ஆம் தேதி கோட்டகத்திலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, கருங்குழி தர்மராஜா கோயிலில் காப்பு கட்டப்பட்டது. அன்று முதல் தினசரி மாலை மகாபாரத கதை, சங்கீத உரை, சிறப்பு அபிஷேக, ஆராதனை, தெருக்கூத்து, சுவாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் 19-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கிருஷ்ணர் விடும் தூது, அரவான் களப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிற்பகல் 3 மணியளவில் பாஞ்சாலி தேவி கூந்தல் முடித்தலும், தொடர்ந்து தீமிதி திருவிழாவும்  நடைபெற்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து சுவாமி தரிசனம் செய்தனர். 
விழாவைக் காண சுற்றுவட்ட கிராம மக்கள் திரளானோர் குவிந்தனர். 
இரவு பாஞ்சாலி தேவி கூந்தல் முடிப்பு தெருக்கூத்து நடைபெற்றது. சனிக்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு விழாவும், பாஞ்சாலி தேவி வீதி உலாவும், இரவில் தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெறும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com