கடலூர்

மழை வேண்டி பால் குடம் ஊர்வலம்

29th Jun 2019 08:23 AM

ADVERTISEMENT

மழை பெய்ய வேண்டி பண்ருட்டி, திருவதிகையில் பால் குடம் ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
பண்ருட்டி, திருவதிகையில் திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. 
இந்தக் கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும்  வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் 1,008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பெண்கள் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். 
பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருவதிகை நகர வாசிகள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT