காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தேசிய அளவிலான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மலேசியா மோனஷ் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் எஸ்.பரசுராமன் பங்கேற்று, பொறியியலில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு எத்தகையது என்பது குறித்து எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கே.ஆனந்தவேலு நன்றி கூறினார். அனைத்துத் துறை சார்ந்த பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.