தேர்வில் சிறப்பிடம் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு மாவட்ட எஸ்பி ப.சரவணன் பாராட்டுத் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் பல்வேறு நிலை காவலர்களின் குடும்பத்திலிருந்து 10-ஆம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதி அதில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் செவ்வாய்க்கிழமை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டினார். அப்போது, அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தணிக்கையாளர் முரளி, தனிப் பிரிவு உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.