கடலூர்

சாராயம் பதுக்கல்: பெண் கைது

31st Jul 2019 08:01 AM

ADVERTISEMENT

சாராயம் பதுக்கல் தொடர்பாக பெண்  கைது செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் 60 லிட்டர் கடத்தல் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
 புதுவை மாநிலத்தில் இருந்து கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மதுப் புட்டிகள்,  சாராயம் கடத்தப்படுவது தொடர்கிறது. இதனை தடுக்க போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திங்கள்கிழமை நெல்லிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்துரு, கருப்பு கேட் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக மொபெட்டில் வந்தவர், அந்தப் பகுதியில் மொபெட்டை நிறுத்திவிட்டு தப்பியோடி மறைந்தார். அந்த வாகனத்திலிருந்த  மூட்டையை ஆய்வு செய்ததில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 60 லிட்டர் விஷ சாராயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் மொபெட்டை பறிமுதல் செய்தனர்.
 இதுபோல, புதுப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வம், அழகுபெருமாள்குப்பம் காலனியில் வசிக்கும் தமிழரசி என்ற சின்ன தங்கச்சி என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் சோதனை செய்தார். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 110 லிட்டர் விஷ சாராயத்தை பறிமுதல் செய்து, 
தமிழரசியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT