கடலூர்

மார்க்சிஸ்ட் கையெழுத்து இயக்கம்

30th Jul 2019 07:28 AM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே மொபெட் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
நெய்வேலி, ஏ-பிளாக் மாற்றுக் குடியிருப்பில் வசிப்பவர் சுப்பிரமணியன் (45). இவரது மனைவி புவனேஸ்வரி (35). இவர்களுக்கு 9 வயதில் பெண் குழந்தையும், 7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு சுப்பிரமணியன் மொபெட்டில் கடலூரில் இருந்து வந்துகொண்டிருந்தார். சத்திரம் - கொள்ளுக்காரன்குட்டை சாலையில் சிறுதொண்டமாதேவி கிராமம் அருகே சென்றபோது, பாலம் கட்டும் பணிக்காக  அமைக்கப்பட்டிருந்த மாற்றுப் பாதையில் செல்லாமல், நேராகச் சென்றதில் சாலையின் நடுவே தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரலில் மொபெட் மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது  மனைவி புவனேஸ்வரி அளித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT