கடலூர்

கண்ணுத்தோப்புப் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

29th Jul 2019 09:55 AM

ADVERTISEMENT

நெய்வேலி அருகே கண்ணுத்தோப்புப் பாலத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
 சென்னை - விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், நெய்வேலி ஆர்ச் - வடலூர் இடையே கண்ணுத்தோப்புப் பாலம் அமைந்துள்ளது. 
இந்தப் பாலம், சுமார் 108 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும்.  
குறுகிய நிலையிலுள்ள இந்தப் பாலம் வழியாக ஒரே சமயத்தில் எதிரெதிர் திசையில் 2 வாகனங்கள் கடந்து செல்ல முடியாது. இதனால், பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். 
 இந்த நிலையில், வடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி டாரஸ் லாரி பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தது. மாலை 4 மணியளவில் கண்ணுதோப்பு பாலம் அருகே லாரி வந்தபோது, அந்தப் பகுதியில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது. 
இதனால் வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. குறுகிய  சாலையில் வாகனங்கள் அடைத்து நிறுத்தப்பட்டதால் லாரி கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர், காவல் துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், இந்தப் பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT