பண்ருட்டியில் மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதிர்ச்சியில் அவரது கணவரும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பண்ருட்டி காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாலு செட்டியார் (83). இவரது மனைவி ராதா அம்மாள் (81). இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் காலமானார். இதனால், வருத்தத்தில் இருந்த பாலு செட்டியார் காலை 6.45 மணியளவில் உயிரிழந்தார். இவர் நெஞ்சு வலியால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு மணிமாறன், பாஸ்கர் என்ற மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.