கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் கார்கில் போர் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ப.குமரன் தலைமை வகித்தார். கார்கில் போரில் பணியாற்றிய ராணுவ வீரர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு தனது போர் அனுபவத்தை மாணவர்களிடம் விளக்கினார்.
இவரை கல்லூரி முதல்வர் கௌரவித்தார் .
கடலூர் கடலோரப் பாதுகாப்புப் படை ஆய்வாளர் சங்கீதா வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து, கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் அருள்ஜோதி, பேராசிரியர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.