கடலூர்

குடிநீர் வழங்கக் கோரி  பொதுமக்கள் சாலை மறியல்

22nd Jul 2019 08:05 AM

ADVERTISEMENT

விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்கக் கோரி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட வடக்கு பெரியார் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  இதுகுறித்து, விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியில், கடலூர் - விருத்தாசலம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் மறியலில் ஈடுபட்ட பொலுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அந்தச் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT