சிதம்பரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்டதாக 20 ஆட்டோக்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் முருகேசன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரெங்கராஜன் மற்றும் போலீஸார் சிதம்பரம் மேல வீதி, வடக்கு வீதி, கீழ விதி, சிதம்பரம் பேருந்து நிலையம், எஸ்.பி. கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததாக 20 ஆட்டோக்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநர்களை எச்சரித்தனர்.