கடலூர்

தொளார் கிராமத்தில்  சுகாதாரத் துறையினர் முகாம்

16th Jul 2019 07:00 AM

ADVERTISEMENT

தொளார் கிராமத்தில் காய்ச்சல் பாதிப்பை அடுத்து சுகாதாரத் துறையினர் முகாமிட்டுள்ளனர்.
திட்டக்குடியை அடுத்த தொளார் கிராமத்தைச் சேர்ந்த சுயம்பிரகாசம் (33)  மனைவி சத்யா (29). இவருக்கு, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார். 
இந்த நிலையில் சுயம்பிரகாசம், சத்யா மாமியார் அஞ்சலை (60), மற்றும் 4 வயது மகன், 5 வயது மகள் ஆகியோருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால் திருச்சியில் தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளனர். 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து மாவட்ட கொள்ளைநோய் தடுப்பு அலுவலர் மனோகரன், நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் வலம்புரிச்செல்வன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொளார் கிராமத்தில் முகாமிட்டு நோய் தாக்குதலுக்கான காரணம் குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். பொசு காதாரத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும் கிராமத்தில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT