திட்டக்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் திட்டக்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் மழை பெய்தது. திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள்
சிரமப்பட்டனர்.
சில கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. திட்டக்குடி, தொழுதூர், ராமநத்தம், பெண்ணாடம், வேப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 1.30 மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.