கடலூரில் இந்து முன்னணி அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்ட பொதுச் செயலர் தங்கவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோயிலுக்கு கட்டுப்பட்ட வண்டிப்பாளையத்திலுள்ள அப்பர் திருக்குளத்தின் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.