கடலூர்

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

12th Jul 2019 08:39 AM

ADVERTISEMENT

திட்டக்குடி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
 திட்டக்குடியில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழைமையான இந்தக் கோயில் திருவிழா 10 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு, ஆராதனை மற்றும் இரவில் வீதி உலா நடைபெற்று வந்தது. மழை வேண்டியும், நாடு நலம் பெறவும், பெண்கள் நலம், நீர்வளம், நிலவளம் வேண்டியும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வியாழக்கிழமை 10-ஆம் நாள் திருவிழா தேர்த் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.
 அலங்கரிக்கப்பட்ட திருத் தேரில் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். நான்கு வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் தேரோடும் வீதிகளில்
 வீடுதோறும் தேங்காய் உடைத்தும், காணிக்கை செலுத்தியும் சிறப்பு வழிபாடு செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT