கடலூர்

டெங்கு விழிப்புணர்வு முகாம்

12th Jul 2019 08:40 AM

ADVERTISEMENT

பண்ருட்டி ஒன்றியம், பணிக்கன்குப்பம் ஊராட்சியில் உள்ள செயின்ட் பால் பப்ளிக் பள்ளி வளாகத்தில், டெங்கு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
 முகாமுக்கு, பள்ளித் தாளாளர் ஏ.கிருபாகரன் தலைமை வகித்தார். முகாமில், அரசு ஆரம்ப சுகாதார அமைப்புக் குழுவினர் பங்கேற்று டெங்கு காய்ச்சல் ஏற்படும் விதம், தடுப்பு முறைகள் மற்றும் ஏடிஸ் கொசுக்கள் பரவும் விதம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 பின்னர், மாணவர்கள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பள்ளி முதல்வர் ஆர்.விஜயா, சிறப்பு ஆலோசகர் சூரியசேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT