கடலூர்

வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

4th Jul 2019 08:39 AM

ADVERTISEMENT

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா புதன்கிழமை மாலை தொடங்கியது.
 இதை முன்னிட்டு, வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வியாழக்கிழமை (ஜூலை 4) முதல் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய்ப்பூ, நவதானியங்கள், வெண்ணெய், கனி வகை அலங்காரங்கள் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT