கடலூர்

லாரி மோதியதில் மளிகைக் கடை ஊழியர் பலி

4th Jul 2019 08:55 AM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே லாரி மோதியதில் மிதிவண்டியில் சென்ற மளிகைக் கடை ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் லட்சுமி நாராயணன் (65), பண்ருட்டியில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர், செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல, பணி முடிந்து மதிவண்டியில் வீட்டுக்குச் சென்றார். அரசூர் முதன்மைச் சாலையில் ஆண்டிக்குப்பம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT