கடலூர்

ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

4th Jul 2019 08:55 AM

ADVERTISEMENT

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில், இலவச எலும்பு கனிம சத்து பரிசோதனை முகாம் தெற்கு வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது.
 முகாமை மாவட்ட ரோட்டரி முன்னாள் ஆளுநர் எஸ்.அருள்மொழிச்செல்வன் தொடக்கி வைத்தார். ரோட்டரி சங்கத் தலைவர் வி.அழகப்பன் வரவேற்றார்.
 முகாமில் மருத்துவர் எஸ்.மணிகண்டராஜன் தலைமையில், 5 பரிசோதனையாளர்கள் எலும்பு பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத் தலைவர் வி.அழகப்பன், செயலர் பி.ரத்தினசபேசன், பொருளாளர் எம்.கனகவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
 முகாமில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் கே.ஜி.நடராஜன், வி.ராமகிருஷ்ணன், டி.டி.கே.பாண்டியன், எஸ்.செந்தில்குமார், எஸ்.சீனிவாசன், உறுப்பினர்கள் சி.சந்திரசேகரன், ஆர்.ராஜசேகரன், என்.என்.பாபு, கே.இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 முகாமில் 75 பேருக்கு எலும்பு கனிம சத்து அளவிடப்பட்டு, இலவசமாக மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.
 இதன் தொடர்ச்சியாக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி ஆர்.முத்துக்குமரன், எஸ்.அருள்மொழிச்செல்வன், வி.சிவப்பிரகாசம், வி.பாரதிசெல்வன், பாலாஜி சுவாமிநாதன் ஆகியோரின் சேவையைப் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT