கடலூர்

தொண்டு நிறுவனம் சார்பில் நெகிழிப் பைகள் அகற்றம்

4th Jul 2019 08:42 AM

ADVERTISEMENT

சிதம்பரத்தில் உள்ள நவ தீர்த்தக் குளங்களில் ஒன்றான நாகச்சேரி குளத்திலிருந்து நெகிழிப் பைகள், குப்பைகளை சிதம்பரம் டைமிங் ஹெல்ப் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சேகரித்து அகற்றினர்.
 அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.வினோத்குமார் தலைமையில், அந்தப் பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இருந்த நெகிழிப் பைகள், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், நகரில் உள்ள மற்ற குளங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT