கடலூர்

காட்டுநாயக்கர் சமூகத்தினருக்கு கறவை மாடுகள் வழங்கக் கோரி மனு

4th Jul 2019 08:54 AM

ADVERTISEMENT

காட்டுநாயக்கர் சமூக சீர்திருத்த சங்கத்தின் தமிழக கிளைச் செயலர் எம்.கோவிந்தசாமி தலைமையில் திரளானோர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
 அதில் தெரிவித்துள்ளதாவது: வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசால் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சிதம்பரம் வட்டத்துக்குள்பட்ட காட்டுநாயக்கர் சமூகத்தினருக்கும் இந்தத் திட்டத்தில் கறவை மாடுகளை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர் மூலமாக கடந்த 2017-ஆம் ஆண்டு இருளர் மற்றும் காட்டுநாயக்கர் சமூகத்தினர் 93 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். ஆனால், இதில், இருளர் சமூகத்தினர் 50 பேருக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், காட்டுநாயக்கர் சமூகத்தினர் முழுமையாக விடுபட்டுள்ளனர்.
 எனவே, இதுகுறித்து தனி விசாரணை அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மேலும், காட்டுநாயக்கர் சமூகத்தினருக்கு விலையில்லா கறவை மாடுகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கோரியுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT