கடலூர்

கடலூரில் 104 டிகிரி வெயில்

4th Jul 2019 08:52 AM

ADVERTISEMENT

கோடை முடிவடைந்து தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. குறிப்பாக, அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரே அதிகபட்சமாக 106.52 டிகிரி வெப்பம் பதிவானது.
 இதைத் தொடர்ந்து, வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தாலும், 96 முதல் 100 டிகிரிக்குள் வெப்பநிலை இருந்தது.
 இந்த நிலையில், புதன்கிழமை 104 டிகிரி வெப்பநிலை பதிவானது. அதே நேரம், வெப்பத்தின் தாக்கம் 111 டிகிரி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
 திங்கள்கிழமை101 டிகிரியும், செவ்வாய்க்கிழமை 99 டிகிரியும் வெப்பம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT