கடலூர்

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

2nd Jul 2019 08:37 AM

ADVERTISEMENT

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி நாள்களை 150-ஆக உயர்த்தக் கோரி, கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
 இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் ரூ.229 கூலியை முழுமையாக வழங்க வேண்டும். கம்மாபுரம் ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கோ.பொன்னேரி, சேப்ளாநத்தம் கிராம மக்களுக்கு சுகாதார வளாகமும், அகரம் கிராமத்தினருக்கு தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதியும் செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வட்டத் தலைவர் சி.ராஜா தலைமை வகித்தார். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT