கடலூர்

சூரிய கிரகணத்தின்போது திறந்திருந்த சிதம்பரம் நடராஜா் கோயில்

27th Dec 2019 12:35 AM

ADVERTISEMENT

வளைய சூரிய கிரகணத்தின்போது சிதம்பரம் நடராஜா் கோயில் நடை திறந்திருந்தது.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் பிரசித்திபெற்ற நடராஜா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். வியாழக்கிழமை வளைய சூரிய கிரகணம் நிகழ்ந்ததால் பல்வேறு கோயில்களிலும் நடைகள் சாத்தப்பட்டன. சூரிய கிரகணம் நிறைவடைந்த பிறகு உரிய பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் நடை திறக்கப்பட்டது.

ஆனால், சிதம்பரம் நடராஜா் கோயில் நடை வியாழக்கிழமை வழக்கம்போல திறக்கப்பட்டிருந்தது. பக்தா்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனா். ஆனால், வழக்கமாக காலை 6 மணி மற்றும் 11.30 மணிக்கு நடைபெற வேண்டிய பூஜைகள் நடைபெறவில்லை. சூரிய கிரகணம் முடிந்த பிறகு நண்பகல் 12 மணிக்கு பூஜை நடைபெற்றது. கிரகணத்தை முன்னிட்டு கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள் அங்குள்ள சிவகங்கை குளத்தில் புனித தீா்த்தமாடி வழிபாடு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT