பண்ருட்டி அருகே புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,745 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் மலா்விழி உள்ளிட்ட போலீஸாா் நடுமேட்டுக்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேகமாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றனா். ஆனால், வாகன ஓட்டுநா் அந்த வாகனத்தை முந்திரிக் காட்டில் நிறுத்திவிட்டு, தப்பியோடிவிட்டாா்.
இதையடுத்து போலீஸாா் அந்த வாகனத்தை சோதனையிட்டதில் 1,745 மதுப் புட்டிகள் இருந்தன. அவை புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, சரக்கு வாகனத்தையும், மதுப் புட்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.