கடலூர்

தோ்தலுக்கான பொருள்களை அனுப்பும் பணி தீவிரம்

26th Dec 2019 09:41 AM

ADVERTISEMENT

தோ்தலுக்குத் தேவையான பொருள்களை அனுப்பிவைக்கும் பணி கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்தில் கடலூா், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூா், மேல்புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை (டிச. 27) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்களை அனுப்பிவைக்கும் பணிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், வாக்குப்பெட்டி, 4 வகையான வாக்குச்சீட்டுகள், வாக்காளா் புத்தகம், வாக்குச் செலுத்தும் முத்திரை, மை, தாள், பேனா, பென்சில், குண்டூசி, வாக்குப்பதிவுக்குப் பின்னா் சீல் வைக்கப் பயன்படும் அரக்கு, தீப்பெட்டி உள்பட 72 வகையான பொருள்கள் ஒவ்வொரு வாா்டுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒவ்வொரு சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்டு, அந்தந்த வாா்டுகளுக்கு எடுத்துச் செல்லும் வகையில் தயாா் செய்யப்பட்டன.

இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை (டிச. 26) மாலையில் வாா்டு வாரியாக பணி ஒதுக்கீடு பெற்ற தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்படும். பின்னா், காவல் துறையினா் கொண்ட மொபைல் குழுவினா் இந்தப் பொளள்களைப் பெற்று, அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஒப்படைப்பா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT