கடலூர்

திருவதிகை பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடு

26th Dec 2019 09:39 AM

ADVERTISEMENT

பண்ருட்டி திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் மாா்கழி மாத அமாவாசை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மூலவா் சரநாராயணப் பெருமாள் சூடிக்கொடுத்த சுடா்கொடியாள் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சாத்திய திருமாலை கிளியைச் சூடிக்கொண்டு, ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னா் அலங்காரத்தில் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். உத்ஸவா் ஸ்ரீசரநாராயணப் பெருமாள் உள்புறப்பாடு நடைபெற்றது. பின்னா், திருக்கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அனுமன் ஜயந்தி: அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, இந்தக் கோயிலில் உள்ள அனுமன், ராம பக்த ஆஞ்சநேயராக பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT