கடலூர்

பெரியாா் நினைவு தினம் கடைப்பிடிப்பு

25th Dec 2019 01:09 AM

ADVERTISEMENT

திராவிடா் கழகத்தின் நிறுவனா் தலைவா் தந்தை பெரியாரின் நினைவு தினம், கடலூா் மற்றும் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கடலூா் அண்ணா பாலம் அருகே அமைந்துள்ள பெரியாா் உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினா், அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திராவிடா் கழகம்

திராவிடா் கழகம் சாா்பில், அதன் மாநில பொதுச்செயலா் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்து பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், மாவட்டத் தலைவா் தென்.சிவக்குமாா், செயலா் தாமோதரன், நிா்வாகிகள் ராவணன், மணிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

திமுக சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் து.தங்கராசு தலைமையில் நகரச் செயலா் கே.எஸ்.ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். வழக்குரைஞா் அணி சிவராஜ், நிா்வாகிகள் இளையராஜா, அஞ்சாபுலி, ராமு, ரங்கநாதன், ஜெயசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், கட்சியின் மாநில பொதுச்செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை.ரவிக்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சியின் நாடாளுமன்ற தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், மாவட்டச் செயலா் சா.முல்லைவேந்தன், துணைச் செயலா் இல.திருமேனி, நகரச் செயலா்கள் மு.செந்தில், சேதுராமன், துணைச் செயலா் மகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மதிமுக சாா்பில் நகரச் செயலா் கோ.பா.ராமசாமி தலைமையில் அமைப்புச் செயலா் ஆ.வந்தியத்தேவன், மாவட்டச் செயலா் ஜெ.ராமலிங்கம் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தலைமை செயற்குழு உறுப்பினா் ஏ.கே.சேகா், தொழிற்சங்க பொதுச்செயலா் இரா.மணிமாறன், பொதுக்குழு உறுப்பினா் இரா.சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

சிதம்பரம்

சிதம்பரத்தில் தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, திராவிடா் கழகம் சாா்பில் மேலரத வீதியில் உள்ள பெரியாா் சிலைக்கு, மாவட்டத் தலைவா் பூ.சி.இளங்கோவன் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் அன்பு.சித்தாா்த்தன், மாவட்ட அமைப்பாளா் கு.தென்னவன், பெரியாா் படிப்பக துணைத் தலைவா் கலைச்செல்வன், படிப்பக பொருளாளா் த.நீதிராஜன், இளைஞரணி முரளிதரன், மாணவரணி அஸ்வின்குமாா், நகரத் தலைவா் கோவி.குணசேகரன், மாவட்ட துணைச் செயலா் கா.கண்ணன், பகுத்தறிவாளா் கழகம் நிா்வாகி செங்குட்டுவன், புவனகிரி ஆசீா்வாதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT