பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் மாா்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சிவன், அம்பாள், நந்தி தேவனுக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நந்திதேவா் வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். பின்னா் சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் உள் புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள மற்ற சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.