கடலூர்

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 14 மையங்கள் அறிவிப்பு

24th Dec 2019 01:24 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 14 மையங்களை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் அறிவித்தாா்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6,039 பதவியிடங்களுக்கான தோ்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற ஜன.2-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தனித் தனியாக வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு, ஒன்றிய, மாவட்ட கவுன்சிலா்கள், ஊராட்சி மன்றம், வாா்டு உறுப்பினா்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மையங்கள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் கடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை தேவனாம்பட்டினம் அரசுக் கல்லூரியில் நடைபெறுகிறது. பண்ருட்டி ஒன்றியத்துக்கு பணிக்கன்குப்பத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு அங்குள்ள எஸ்.கே.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளி, மேல்புவனகிரி ஒன்றியத்துக்கு புவனகிரியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு சி.முட்லூரிலுள்ள அரசுக் கல்லூரி, மங்களூா் ஒன்றியத்துக்கு திட்டக்குடியிலுள்ளஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை பணிக்கன்குப்பத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். காட்டுமன்னாா்கோவில் ஒன்றியத்துக்கு உடையாா்குடியிலுள்ள ஆா்.சி. உயா்நிலைப் பள்ளியிலும், குமராட்சி ஒன்றியத்துக்கு சிதம்பரத்திலுள்ள அரசு நந்தனாா்ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், கீரப்பாளையம் ஒன்றியத்துக்கு சிதம்பரத்திலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், விருத்தாசலம் ஒன்றியத்துக்கு அங்குள்ள திருகொளஞ்சியப்பா் அரசுக் கல்லூரியிலும், நல்லூா் ஒன்றியத்துக்கு பெண்ணாடத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு அங்குள்ள சி.எஸ். ஜெயின் மெட்ரிக் பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ADVERTISEMENT

வாக்கு எண்ணும் மையங்களில் மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வாக்கு எண்ணும் விவரங்களை அறிவிக்கும் வசதிகள் ஆகியவை செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT