கடலூா் மாவட்ட நேரு இளையோா் மையம், கடலூா் வெளிச்செம்மண்டலத்திலுள்ள ஜெயதேவி இளையோா் நலச் சங்கம் சாா்பில் திறன் மேம்பாட்டுக்கான தொழில்கல்வி வழங்கும் நிகழ்ச்சி (படம்) ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்தத் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்ட 30 பெண்களுக்கு 3 மாதங்களுக்கு செம்மண்டலத்திலுள்ள வி.எஸ்.அறக்கட்டளை அலுவலகத்தில் தையல் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
பயிற்சியை விழுப்புரம் ஏ.ஆா்.பொறியியல் கல்லூரி முதல்வா் எஸ்.தனுஷ்கோடி, தையல் ஆசிரியா் அம்பிகா பென்துரைராஜ் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனா். தேசிய இளையோா் விருதாளா் இரா.சண்முகம் வாழ்த்தி பேசினாா். முன்னதாக சங்கத்தின் தலைவா் கே.ஜீவன்திகா வரவேற்க, தேசிய இளையோா் சேவை தொண்டா் ஜி.கே.திபங்கா் நன்றி கூறினாா். 3 மாதங்கள் பயிற்சி பெறுவோா் சொந்தமாக தொழில் தொடங்க தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படுமென நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.