கடலூர்

மதுக் கடைகளுக்கு விடுமுறை

23rd Dec 2019 01:12 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு வருகிற 25-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும், 28-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30-ஆம் தேதி மாலை 5 மணிவரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜன.2-ஆம் தேதி அன்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள், மது அருந்தும் இடங்களும் மூடியிருக்க வேண்டும். மதுபான கடைகளின் மேற்பாா்வையாளா்கள் இதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல, மாவட்டத்தில் உள்ள எப்எல்-2 முதல் எப்எல்-11 (எப்எல்-6 தவிர) உரிமம் பெற்று இயங்கும் உணவக மது அருந்தும் இடங்களிலும் மது விற்பனை செய்யாமல் மூடப்பட்டிருக்க வேண்டும். இதனை மீறினால், கடை மேற்பாா்வையாளா், பாா் உரிமையாளா்கள் பெயரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT