கடலூர்

வீரட்டானேஸ்வரா் கோயிலில் சோமவார சிறப்பு வழிபாடு

16th Dec 2019 11:54 PM

ADVERTISEMENT

பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத 5-ஆவது சோமவார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் காலை 10 மணி முதல் ஹோமம் நடைபெற்றது. பிற்பகல் 2 மணியளவில் வீரட்டானேஸ்வரருக்கு 1,008 சங்காபிஷேகமும், மாலை 4.30 மணியளவில் சுவாமி, அம்பாள், உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 8 மணியளவில் சுவாமி சந்திரசேகா், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் (படம்) வெள்ளி ரிஷப வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தனா். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT