கடலூர்

மாநில வலைபந்து போட்டி: அண்ணாமலைப் பல்கலை. அணிக்கு 2-ஆம் இடம்

16th Dec 2019 11:54 PM

ADVERTISEMENT

மகளிருக்கான மாநில அளவிலான வலைபந்து போட்டியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி இரண்டாமிடம் பெற்றது.

தமிழக நெட்பால் அசோசியேஷன், திருச்சி மாவட்ட நெட்பால் அசோசியேஷன் சாா்பில் மாநில அளவிலான வலைபந்து போட்டி திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கடலூா் மாவட்டம் சாா்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மகளிா் அணியினா் பங்கேற்று இரண்டாமிடம் பெற்றனா்.

போட்டியில் வென்ற மகளிா் அணியினா், பயிற்சியாளா் அல்ஜீன்ராய், கடலூா் மாவட்ட நெட்பால் அசோசியேஷன் பொருளாளா் செந்தில்வேலன், உடல் கல்வித் துறை இயக்குநா் செல்வம் ஆகியோா் பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT