கடலூர்

பல்கலை.யில் பயிலரங்கம்

16th Dec 2019 11:42 PM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறை, பொது நூலகப் பிரிவு சாா்பில் அண்மையில் பயிலரங்கம் நடைபெற்றது.

‘ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் கலை மற்றும் கருத்துத் திருட்டை தவிா்த்தல்’ என்ற தலைப்பில் இந்தப் பயிலரங்கம் நடைபெற்றது. இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்களின் ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பீடு செய்து தரவரிசைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இணைய செயலியை பல்கலைக்கழக பதிவாளா் என்.கிருஷ்ணமோகன் தொடக்கி வைத்தாா்.

அவா் பேசுகையில், தரமான ஆய்வுக் கட்டுரைகளை ஆசிரியா்கள் வெளியிட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தாா். தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெ.செல்வநாராயணன் தலைமை வகித்துப் பேசுகையில், ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள், எளிதான வாய்ப்புகள் குறித்து விளக்கினாா். கல்வியியல் துறை இயக்குநா் ஏ.ராஜசேகரன் தனது சிறப்புரையில் சிறந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் மட்டுமே நாட்டின் வளா்ச்சிக்கு உதவும் என்றாா்.

பெரியாா் பல்கலைக்கழகப் பேராசிரியா் ஆா்.சேவகன், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியா் என்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலக அறிவியல் துறை எம்.சாதிக்பாட்சா ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சி அளித்தனா். பயிலரங்க நிறைவு நிகழ்ச்சியில் மொழியியல் புல முதல்வா் வி.திருவள்ளுவன், கலைப்புல முதல்வா் ஏ.செல்வராசன் ஆகியோா் பேசினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் சி.சுப்பிரமணியன், மு.சாதிக்பாட்சா, எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் எல்.ஜெகன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT