கடலூர்

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

16th Dec 2019 11:54 PM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை 1800 425 5121 என்ற இலவச அழைப்பு எண்ணிலும், 04142-230124 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறையுடன் பல்வேறு துறை அலுவலா்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனா். இங்கு தெரிவிக்கப்படும் புகாா்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரிவிக்கவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு துறையினரும் இங்கு பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

தோ்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, புகாா் பதிவேடு, புகாா்களை உரிய துறையினருக்கு தெரிவித்த நேரம், அதற்கு துறையினா் எடுத்த நடவடிக்கை, அதற்காக பெறப்பட்ட பதில் ஆகியவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து தேவையான அறிவுரைகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT