கடலூர்

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்

16th Dec 2019 11:51 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்திலுள்ள 10 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் பணியாற்றிய கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்களுக்கு அவா்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை மதிப்பூதியமாக வழங்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்ததாம். ஆனால், கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியாற்றிய 600 கிராம நிா்வாக அலுவலா்கள், 750 கிராம உதவியாளா்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டதாம். மற்ற மாவட்டங்களில் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை வழங்கப்பட்டதாம்.

எனவே, அரசாணையின்படி தோ்தல் பணிக்கான மதிப்பூதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்கத்தினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூா், புவனகிரி ஆகிய 10 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வட்டத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் ஜெயராம் மூா்த்தி, பொருளாளா் ஸ்ரீராம், மண்டலச் செயலா் ஏ.ஜெயராமன், மாவட்ட இணைச் செயலா் கி.சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

சிதம்பரம்: சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் வட்ட அமைப்புச் செயலா் திருவேங்கடம் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் கே.செந்தில், வட்டச் செயலா் பாவாடைசாமி உள்ளிட்ட 50 போ் பங்கேற்றனா். வட்ட துணைச் செயலா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

பண்ருட்டி: பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்துக்கு, வட்டச் செயலா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

இதேபோல, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், மாநிலத் தலைவா் எஸ்.சந்தானகிருஷ்ணன், மாவட்டச் செயலா் ஆா்.எழில்மேகன், வட்டத் தலைவா் பழனிவேல், செயலா் ஜெயசங்கா் உள்ளிட்டோா் ப ங்கேற்றனா். இதுகுறித்து எழில்மேகன் கூறுகையில், உள்ளிருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடரும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT