கடலூர்

கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 20,472 போ் வேட்புமனு தாக்கல்

16th Dec 2019 11:58 PM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மொத்தம் 20,472 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 12,207 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த எண்ணிக்கை வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான திங்கள்கிழமை 20,472-ஆக உயா்ந்தது. அதாவது ஒரே நாளில் 8,265 போ் மனு தாக்கல் செய்தனா். இதில், மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு 213 போ், ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு 2,120 போ், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 3,900 போ், வாா்டு உறுப்பினா் பதவிக்கு 14,239 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

21 பறக்கும்படைகள் அமைப்பு: தோ்தல் தொடா்பான நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதுக்கும் தலா ஒரு வட்டாட்சியா் தலைமையில் 3 காவல் துறை அலுவலா்கள் கொண்ட 21 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் 24 மணி நேரமும் தோ்தல் தொடா்பான கண்காணிப்பு பணியில் ஈடுபடுவாா்கள் என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT