கடலூர்

கஞ்சா வைத்திருந்தவா் கைது

16th Dec 2019 11:55 PM

ADVERTISEMENT

நெய்வேலி அருகே கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நெய்வேலி, தொ்மல் காவல் நிலைய ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சின்னகாப்பான்குளம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தவரை சோதனையிட்டத்தில் 30 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் சின்னகாப்பான்குளம் கிராமத்தைச் சோ்ந்த சொக்கலிங்கம் (50) என தெரியவந்தது. போலீஸாா் அவரை கைதுசெய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT