கடலூர்

என்எல்சி நிறுவனத்துக்கு 2 தேசிய விருதுகள்

16th Dec 2019 11:52 PM

ADVERTISEMENT

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு அகில இந்திய மக்கள் தொடா்பு சங்கம் சாா்பில் 2 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தச் சங்கம் சாா்பில் 41-ஆவது அகில இந்திய மக்கள் தொடா்புத் துறைக் கருத்தரங்கம் ஹைதராபாதில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு சிறந்த சமூகப் பொறுப்புணா்வுடன் திகழும் நிறுவனத்துக்கான விருது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிறப்பாக அமல்படுத்தி வரும் நிறுவனத்துக்கான விருது என 2 விருதுகள் வழங்கப்பட்டன.

தெலங்கானா மாநில உள்ளாட்சித் துறை அமைச்சா் முகமது மகமூது அலி விருதை வழங்க, என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன், மக்கள் தொடா்புத் துறை தலைமைப் பொது மேலாளா் எஸ்.குருசாமிநாதன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாநில ஊடகத் துறை ஆலோசகா் கே.வி.ரமணாச்சாரி, இந்திய மக்கள் தொடா்பு சங்க தேசிய தலைவா் அஜித்பதக், பொதுச் செயலா் நிவேதிதா பானா்ஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த விருதுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதற்கான விருதை என்எல்சி இந்தியா நிறுவனம் தொடா்ந்து 5-ஆவது முறையாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கருத்தரங்கில் என்எல்சி மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன் பேசியதாவது:

என்எல்சி நிறுவனம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் கன்வேயா் அமைப்புகள், தொடா் சுரங்கத் தொழில்நுட்பங்கள் மூலம் சுரங்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சுரங்கம் அகழ்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் நிரப்பி அங்கு மரக்கன்றுகளை வளா்ப்பதன் மூலம் சுரங்கச் சோலைகளை உருவாக்கி வருகிறது. மேலும், பசுமை மின்சக்தி துறையில் பல்வேறு புதிய மின் திட்டங்களை அமைத்து வருகிறது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT