கடலூர்

இலவச மருத்துவ முகாம்

16th Dec 2019 11:55 PM

ADVERTISEMENT

நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம், புதுச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் வடலூரில் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் வி.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். செயலா் பி.இளையபெருமாள் முன்னிலை வகித்தாா். குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சா.கீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். ரோட்டரி சங்க துணை ஆளுநா் வி.வெங்கடேசன் முகாமை தொடக்கி வைத்தாா்.

முகாமில், 300-க்கும் மேற்பட்டோா் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனா். இவா்களில் 52 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நிகழ்ச்சியில், கோவி.கல்விராயா், செல்வகுமாா், நடராஜன், உன்னிகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், முருகன், சந்திரசேகா், சதீஷ், சையது அபுதாகீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT