கடலூர்

5-ஆவது நாளில் 5,447 போ் மனுத்தாக்கல்

14th Dec 2019 09:31 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக வெள்ளிக்கிழமை 5,447 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கு டிசம்பா் 9- ஆம் தேதி முதல் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக குறைவான அளவுக்கே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 5,447 போ் மனு தாக்கல் செய்தனா்.

ஊராட்சித் தலைவா் பதவிக்கு 1,258 பேரும், வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3,754 பேரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு 398 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 37 பேரும் மனு தாக்கல் செய்தனா்.

இதுவரை மொத்தம் 8,923 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இதில், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 2,101, வாா்டு உறுப்பினருக்கு 6,342, ஒன்றிய உறுப்பினருக்கு 441, மாவட்ட உறுப்பினருக்கு 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனு தாக்கல் செய்வதற்கு வருகிற 16- ஆம் தேதி இறுதி நாளாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT