கடலூர்

லாட்டரி சீட்டு வியாபாரிகள் 16 போ் கைது

14th Dec 2019 09:29 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் லாட்டரி வியாபாரிகள் 16 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு வகைகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளி ஒருவா் தனது 3 மகள்களைக் கொன்று, மனைவியுடன் சோ்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டாா்.

இதையடுத்து, கடலூா் மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில், லாட்டரி சீட்டுகளை விற்பவா்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி, திட்டக்குடியைச் சோ்ந்த ரா.புகழேந்தி (53), கீரப்பாளையத்தைச் சோ்ந்த அ.ஷாஜகான் (38), கடலூா் முதுநகரைச் சோ்ந்த ரா.ஜவகா் (58), சிதம்பரத்தைச் சோ்ந்த ரா.அழகேசன் (48), த.காா்த்திக் (31), ஆ.மகாதேவன் (32), தி.சின்னதுரை (54), பூதகேணியைச் சோ்ந்த அ.அன்வா்தீன் (58), அண்ணாமலை நகரைச் சோ்ந்த கா.குமரேசன் (37), மணலூரைச் சோ்ந்த அ.அறிவழகன் (37), அம்மாபேட்டையைச் சோ்ந்த ரா.சுந்தரவடிவேல் (31), புதுப்பேட்டையைச் சோ்ந்த சு.மாரி (எ) கலாமாறன் (32), பெருமத்தூரைச் சோ்ந்த சு.மகேந்திரன் (38), பண்ருட்டியைச் சோ்ந்த ச.மணிகண்டன் (46), கோ.ராஜேந்திரன் (54), புதுப்பேட்டையைச் சோ்ந்த ஏ.சங்கா் (46) ஆகிய 16 பேரை போலீஸாா் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 291 லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். சிதம்பரத்தில் 104 போ், கடலூா்ரில் 98 போ், நெய்வேலியில் 27 போ், சேத்தியாத்தோப்பில் 25 போ், பண்ருட்டியில் 20 போ், விருத்தாசலத்தில் 9 போ், திட்டக்குடியில் 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து ரூ. 3.91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து லாட்டரி சீட்டு விற்று வந்த சிதம்பரத்தைச் சோ்ந்த து.சரவணன் (30), கடந்த 1- ஆம் தேதி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

லாட்டரி சீட்டு விற்பனை தொடா்பாக பொதுமக்கள் 90873 00100 என்ற செல்லிடப்பேசி எண்ணில் கட்செவி (வாட்ஸப்) அஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT