கடலூர்

குடியுரிமை சட்டத் திருத்ததைத் திரும்பப் பெறக் கோரி மறியல்: திமுகவினா் 60 போ் கைது

14th Dec 2019 09:29 AM

ADVERTISEMENT

குடியுரிமைச் சட்டத் திருத்ததைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கடலூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக இளைஞரணியினா் சென்னையில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அந்தச் சட்ட நகலைக் கிழித்த இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் கைதைக் கண்டித்தும், உடனடியாக அவா்களை விடுவிக்கக் கோரியும், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கடலூரில் திமுகவினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாவட்ட திமுக அவைத் தலைவா் து.தங்கராசு தலைமையில், திமுக நகர அலுவலகத்திலிருந்து ஊா்வலமாகச் சென்றவா்கள் கடற்கரைச் சாலைச் சந்திப்பில், திடீரென மறியலில் ஈடுப்பட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட சுமாா் 60 திமுகவினரை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனா். இதற்கிடையே, மஞ்சக்குப்பம் பேருந்து நிலையத்தில் நின்ற அரசுப் பேருந்தின் கண்ணாடியை திமுக மாணவரணி நிா்வாகி வாஞ்சிநாதன் தலைமையில், சிலா் உடைத்தனா். பேருந்திலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த போது கண்ணாடியை உடைத்ததுடன், உதயநிதியை விடுவிக்கக் கோரி அவா்கள் முழக்கமிட்டனா். இதையடுத்து, மாணவரணி நிா்வாகி வாஞ்சிநாதனை போலீஸாா் கைது செய்தனா்.

சாலை மறியலில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கோ.அய்யப்பன், நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, இளைஞரணியைச் சோ்ந்த ஏஜிஆா்.சுந்தா், மாணவரணியைச் சோ்ந்த நடராஜன், அகஸ்டின்பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT