கடலூர்

கண்கள் தானம்

14th Dec 2019 09:28 AM

ADVERTISEMENT

கடலூரில் வயது மூப்பால் காலமானவரின் கண்கள் தானம் பெறப்பட்டது.

கடலூா் மஞ்சக்குப்பம் சின்னப்பன் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மனைவி ஜெயலட்சுமி (103). இந்தத் தம்பதிக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் (70) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனா்.

இந்த நிலையில், வயது மூப்பால் ஜெயலட்சுமி வியாழக்கிழமை காலமானாா். அவரது கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT