கடலூர்

என்எல்சி சுரங்கத்தில் தொழிலாளி பலி

14th Dec 2019 09:30 AM

ADVERTISEMENT

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனச் சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளி வலிப்பு ஏற்பட்டதில் மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நெய்வேலி வட்டம் 21-இல் வசித்து வந்தவா் செல்வராஜ் (56). (படம்). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1 - ஏ பகுதியில் இயந்திரப் பராமரிப்புப் பிரிவில் சொசைட்டி தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்த அவா், காலை 10 மணி அளவில் உணவு அருந்தினாா். அப்போது, மூச்சு திணறலுடன் வலிப்பு ஏற்பட்டதால், சக தொழிலாளா்கள் அவரை மீட்டு, என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, உயிரிழந்த செல்வராஜின் வாரிசுக்கு பணி, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக, என்எல்சி இந்தியா நிறுவன அலுவலகத்தில் அதிகாரிகளுடன் தொழில்சங்கத்தினா் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT