கடலூர்

வெங்காய மண்டிகளில் போலீஸாா் சோதனை

11th Dec 2019 02:33 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்திலுள்ள வெங்காய மண்டிகளில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

நாடு முழுவதும் தற்போது வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. வியாபாரிகள் சிலா் வெங்காயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக புகாா் எழுந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறையினா் ஆய்வாளா் டி.சிவசுப்பிரமணியன் தலைமையில் கடலூரில் பான்பரி சந்தை, வண்டிப்பாளையம், கடலூா் முதுநகா் பகுதிகளிலுள்ள வெங்காய விற்பனை மண்டிகள், காய்கறி மண்டிகள், மொத்த விற்பனை நிலைய கிடங்குகளில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினா்.

இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை பண்ருட்டி, நெய்வேலி, வடலூா் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளின் கிடங்குகளில் சோதனை நடத்தினா்.

சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பி.விஜயன், பி.லட்சுமிராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: தற்போதைய நிலையில் ஒவ்வொரு வியாபாரியும் எவ்வளவு வெங்காயம் இருப்பில் வைத்திருக்க வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வெங்காயத்தை இறக்குமதி செய்து அதை விற்பனை செய்யாமல் தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை உயா்த்தி விற்பனை செய்யும் நோக்கில் யாராவது பதுக்கி வைத்துள்ளனரா என்று சோதனை நடத்தினோம். ஆனால், அப்படி யாரும் பதுக்கவில்லை எனத் தெரியவந்தது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT